​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகளே காரணம்" - ரஷ்ய அதிபர் புதின்

Published : Jun 04, 2022 12:15 PM

"உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகளே காரணம்" - ரஷ்ய அதிபர் புதின்

Jun 04, 2022 12:15 PM

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், உலகளாவிய உணவு சந்தையில் ஏற்படும் பிரச்சனைகளை ரஷ்யா மீது திசை திருப்ப மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாகவும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் உரங்கள் மீது விதித்த தடையால் நிலைமை மோசமாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

ரஷ்யாவும் உக்ரைனும் உலகளவிலான கோதுமை விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.